மகாவம்சம் பாலி மொழியில் எழுதப்பட்டது வியப்பிற்குரியதன்று

2 ing
2 ing

பாலி/ பாளி (Pali) மொழி என்பதன் பெயரிற்கான பொருளிலேயே இதற்கான பதிலிருக்கின்றது. பாலி என்பதன் பொருளே வரிசை (“line, row, series”) என்பதாகும். பௌத்தர்கள் தமது மத நூல்களை வரிசையாக எழுதப் பயன்படுத்தப்பட்ட மொழி என்று பெளத்தர்கள் பொருள் கொள்வார்கள் {pāḷibhāsā = “language of the texts” , A Dictionary of the Pali Language By Robert Childers}. எனவே பவுத்த மதக் கருத்துக்களைக் கொண்ட மகாவம்சம் பாலி மொழியில் எழுதப்பட்டது வியப்பிற்குரியதன்று. இந்த பாளி மொழியானது ஒரு வகையான பிராகிரத மொழியாகும் (Magadhi Prakrit). சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாலியே என்று கருதுகிறார்கள் (சான்றுகளில்லை). இலங்கையில் பவுத்தம் பாலி மொழியினூடாகவே பரவியது (ஆகக் குறைந்தது நூல்கள் வடிவில்).

பெளத்தம் இலங்கையில் நுழைந்த காலத்தில் (BCE 3rd / 2nd cent ) இலங்கையில் எலு, தமிழ் ஆகிய இரு மொழிகள் மட்டுமே புழக்கத்திலிருந்தன (வேடுவ மொழியும் இருந்தது) . இதில் தமிழ் பேச்சு,எழுத்து ஆகிய இரு வடிவங்களைக் கொண்டிருந்தபோதும்; எலு மொழியானது பேச்சு வடிவத்தினை மட்டுமே கொண்டிருந்தது. பின்னர் பாலி மொழியானது எலு மொழி மீது தாக்கம் செலுத்தியதால்; காலப் போக்கில் சில நூற்றாண்டுகளிற்குப் பின் எலு மொழியானது வழக்கிழந்தது . பின்பு, பாலி + எலு ஆகியன கலந்து உருவான கலப்பு மொழியாகவே சிங்களம் காணப்படுகின்றது. இச் சிங்கள மொழியின் உருவாக்கத்தில் தமிழும் பங்களித்துள்ளது. கிட்டதட்ட 2000 தமிழ் சொற்களை சிங்கள மொழி கொண்டிருக்கிறது .