சற்று முன்
Home / பொதுக்குரல் / இந்த மாதிரி ஒரு பெண்ணை அக்காவாக பெற்ற தம்பி கொடுத்துவச்சவன்!
7d5 1
7d5 1

இந்த மாதிரி ஒரு பெண்ணை அக்காவாக பெற்ற தம்பி கொடுத்துவச்சவன்!

இரண்டு வாரங்களுக்கு முன்பு ராக்கி என்ற சிறுமி 11 வயது உடையவள் ,தம்பியுடன் தனது வீடு அருகில் விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு சிறுத்தை ராக்கியின் தம்பியை தாக்க பாய்ந்தது.

கொஞ்சமும் தயக்கமின்றி ராக்கி தன் தம்பியை கீழே தள்ளிவிட்டு தன் தம்பியின் மேலே படுத்தாள். சிறுத்தை ராக்கியின் கழுத்தை தாக்க ஆரம்பித்தது. ரத்தம் பீச்சி அடித்தாலும், தன் உயிரே போனாலும் தன் தம்பியை காப்பாற்ற வேண்டும் என்று இந்த 11 வயது வீராங்கனை ராக்கி தன் தம்பியை விட்டு எழவே இல்லை.

இவளின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த அனைவரும் இவளை காப்பாற்ற வந்தார்கள். சிறுத்தை தப்பித்து ஓடியது. ஆனால் அதற்குள் ராக்கிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தம்பிக்கோ சிறு காயம் கூட இல்லை.

ஒரு நல்ல விசயம், ராக்கியின் நிலைமை இப்பொழுது நன்றாக தேறியுள்ளது. இந்த மாதிரி ஒரு பெண்ணை அக்காவாக பெற்ற அந்த குட்டி பையன் ரொம்ப கொடுத்துவச்சவன்.

One comment

  1. Sivam Amuthasivam

    இப்படியானதொரு உண்மையான உடன்பிறப்புகளை எனக்குக் கொடுக்காதது ஒன்றுதான் எனது பெற்றோர்கள் எனக்குச் செய்த துரோகம்.
    எனக்கு 3 உடன்பிறப்புகள். ஆனால், அத்தனையும் பணப்பேய்கள்.
    வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் உள்ள யான், பல இடங்களில் இதைப் பதிவு செய்திருக்கிறேன்.
    இங்காவது எனக்கான நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

6 ff

ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு

யாழ்ப்பாணத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், ...