சிறுநீரகத்தை சீராக்கும் பழச்சாறு

avatars 000362265650 fuowja t500x500
avatars 000362265650 fuowja t500x500

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும்.

அந்தவகையில் சிறுநீரகத்தையும் இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும் ஓர் அற்புத பழச்சாற்றை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
அன்னாசி பழச்சாறு – 1கோப்பை
கற்றாழை சாறு – 2 மே.க
எலுமிச்சை – 1
புதினா – சிறிது
தண்ணீர் – 1/2கோப்பை


செய்முறை

முதலில் 2மே.க கற்றாழைச் சாற்றுடன் 1/2 கோப்பை நீர் சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும்.

அத்துடன் அன்னாசிப் பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்தால், பழச்சாறு தயார்.

நன்மை

கற்றாழை இயற்கையாகவே அல்கலைன் தன்மை கொண்டது. இது உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, செரிமான மண்டலத்தை சீராக செயல்பட செய்யும் மற்றும் குடலியக்கப் பிரச்சனைகளைத் தடுக்கும்.

இரத்தத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, சிறுநீரகங்களையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.