சூரியனின் மேற்பரப்பை துல்லியமாக படம்பிடித்த நவீன தொலைநோக்கி

200129131310 01 nsf solar telescope exlarge 169
200129131310 01 nsf solar telescope exlarge 169

அமெரிக்காவில் உள்ள புதிய நவீன தொலைநோக்கியின் மூலம் சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பு இதுவரை இல்லாத வகையில், துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

சூரியன் உட்பட எம் கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை.

சூரியனைப்பற்றியும், சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், வானியற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடான அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பு சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் எடுக்காத வகையில் துல்லியமான புகைப்படத்தை நவீன நுண்ணோக்கி மூலம் படம்பிடித்துள்ளது.