அதிமதுரத்தின் நன்மைகள்

download 2
download 2

அதிமதுரத்தின் மருத்துவக் குணங்கள் உணரப்பட்டு, உலகத்தின் பெரும்பாலான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

மிக எளிய முறையில் அதிமதுரத்தைப் பயன்படுத்தினாலே, அநேக நோய்களை நீக்கிவிட முடியும்.

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேகரித்துக்கொண்டு, 250 கிராம் சர்க்கரையுடன் தண்ணீர் சிறிதளவுவிட்டு, பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும்.

தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிளறி, லேகியம் தயாரித்து மூன்று முறை இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், மனச்சோர்வு மாறும்.

அதிமதுரத்தை நன்கு பொடித்துப் பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாதுவிருத்தி உண்டாகும், உற்சாகம் அதிகரிக்கும்.

அதிமதுரம், கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைச் சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தலைவலி தீரும்.