புதிய முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்

unnamed 3
unnamed 3

நிலவின் மர்மமான பகுதியை நோக்கிய சந்திரயான் 2 எனும் விண்கலத்தினை அனுப்பும் முயற்சியால் உலக நாடுகளின் கவனத்தினை தன்பக்கம் ஈர்த்திருந்த ஈஸ்ரோ நிறுவனம். தற்போது மற்றுமொரு முயற்சியில் இறங்க தயாராகியுள்ளது.

அதாவது வழமைக்கு மாறாக செயற்கைக்கோள்களை விண்ணிற்கு ஏவுவதற்கான ரொக்கெட்டுக்களை குறைந்த செலவில் வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறான ரொக்கெட்டுக்களின் மொத்த செலவுகளையும் 30 முதல் 35 கோடி ரூபாய்களுக்குள் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வடிவமைக்கும் ரொக்கெட்டுக்கள் 500 கிலோ கிராம் வரை எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணிற்கு சுமந்து செல்லக்கூடியதாக இருக்கும்.

இத் திட்டத்தின் கீழான முதலாவது செயற்கைக்கோளினை அடுத்த 4 மாதங்களுக்குள் விண்ணில் ஏவுவதற்கு எதிர்பார்த்து தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது ஈஸ்ரோ.