குபேரனுக்கு பிடித்த இந்த பொருள் உங்க சமையலறையில் இருக்கா? ஐஸ்வர்யம் பெருகுமாம்

0ff947cc76bbb8de6115ed6ff240a37f
0ff947cc76bbb8de6115ed6ff240a37f

ஒரு குடும்பத்தின் முக்கிய இடம் சமையல் அறை. ஏதோ சமைக்கிறோம்,ஏதோ சாப்பிடுகிறோம் என்று நினைக்கக்கூடாது.

சமையல் அறையில் சமைக்கப்படும் உணவுதான் அக்குடும்பத்தில் உண்ணும் மக்களின் உணர்வுகளாக மாறுகிறது.

ஒரு சமையல் அறை என்பது ஒரு தவக்கூடத்திற்கு சமம். பெண் என்பவள் சமையல் அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

சமையல் அறையில் இருக்க வேண்டியவை

அன்னபூரணியின் திருவுருவப்படம்: சமையல் அறையில் அன்னபூரணி உருவப்படம் இருக்க வேண்டும். தினமும் காலையில் சமைக்க ஆரம்பிக்கும் முன் அன்னபூரணியின் திருவுருவப்படத்தை வணங்கிவிட்டு சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.

அசைவம் சமைக்கும் நாட்களில் மட்டும் அன்னபூரணியின் திருவுருவப்படத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

மஞ்சள்: மஞ்சள்த்தூளாக இருந்தாலோ அல்லது கிழங்காக இருந்தாலோ மஞ்சள் குறையாமல் நிறைய மஞ்சளை சமையல் அறையில் வைத்திருக்க வேண்டும்.

உப்பு: நிறைந்த உப்பு அடுப்பறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.உப்பு மகாலக்ஷ்மிக்கு இணையாக கருதப்படுகிறது.

நிறைகுட தண்ணீர்: இந்த நவீனகாலத்தில் குடத்தை யாரும் பயன்படுத்துவதில்லை என்றாலும் ஒரு சிறிய சொம்பிலாவது தண்ணீர் பிடித்து சமையல் அறையில் வைக்க வேண்டும்.

ஊறுகாய்: நீங்கள் ஊறுகாய் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் சாப்பிடாதவர்களாக இருந்தாலும் ஊறுகாய் நிச்சயம் சமையல் அறையில் இருக்க வேண்டும்.

ஏனெனில் குபேரனுக்கு மிகவும் பிடித்தது ஊறுகாய். இந்த பொருட்கள் அனைத்தும் இருக்கும் சமையல் அறை மகாலக்ஷ்மி குடியிருக்கும் இடமாக இருக்கும்.