பல் துலக்கும்போது கடைப்பிடிக்க வேண்டியவை

201609090744478975 How many months can use toothbrush SECVPF
201609090744478975 How many months can use toothbrush SECVPF

பொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்றாக துலக்கி, சுத்தமாக குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் இந்த நல்ல பழக்கத்தை எப்போதுமே தவறாமல் கடைபிடித்து வந்தால், பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நம்மை நெருற்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தினமும் பல் துலக்கும் போது, செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து, அதை சரிசெய்து கொண்டால், நாம் எப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

பல் துலக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  • பல் துலக்குவதற்கு நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷைப் பயன்படுத்தினால், வாயில் கிருமிகளின் வளர்ச்சியை அதிகமாக்கிவிடும். எனவே ஒரு டூத் பிரஷை 2 மாதத்திற்கு மேல் பயன்படுத்தாமல், புதிய டூத் பிரஷை வாங்கி பல் துலக்க வேண்டியது அவசியம்.
  • காலையில் பற்களை துலக்கும் போது, 2 நிமிடமாவது நன்றாக துலக்குவது அவசியம்.
  • இதனால் நம் வாயில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
  • பற்களை துலக்கி முடித்ததும், குளியல் அறையில் டூத் பிரஷ் வைப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் குளியல் அறையில் இருக்கும் கிருமிகள் டூத் பிரஷில் பரவுகிறது. எனவே அதை மீண்டும் பயன்படுத்தும் போது வாயில் கிருமிகள் நுழைந்து, பல் மற்றும் ஈறுகளை பாதிப்படையச் செய்து விடும்.
  • பற்களைத் துலக்கும் போது, நாக்கையும் சுத்தம் செய்யணும். இதனால் நாக்கில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் எற்படாது.
  • பற்களைத் துலக்கிய உடனே நீரால் வாயைக் கொப்பளிக்காமல், பற்களைத் நன்றாக துலக்கிய பின் 15 நிமிடம் கழித்து வாயைக் கொப்பளிப்பது நல்லது. இதனால் வாயில் உள்ள கிருகிகள் முற்றிலும் அழிந்து விடும்.