சற்று முன்
Home / பொதுக்குரல் / ஏனையவை / வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!
ht4451443
ht4451443

வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளன.

குறிப்பாக இதில் புரோட்டீன், கல்சியம், மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் இருக்கிறது.

இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தார்கள்.

தினமும் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.

வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுத்து விடும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறைந்து விடும்.

x

Check Also

201609090744478975 How many months can use toothbrush SECVPF

பல் துலக்கும்போது கடைப்பிடிக்க வேண்டியவை

பொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்றாக துலக்கி, சுத்தமாக குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க ...