மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமா!இவற்றை பின்பற்றுங்கள்

download 2 3
download 2 3

மனிதர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான ஏற்ற இறக்கங்கள் வரும்.

வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்து போவது இயல்பான ஒன்று தான். சில ஆரோக்கிய பிரச்சனைகளும் வந்து போகும். அதை எல்லாம் கடந்து வாழ்வது தான் வாழ்க்கை. குறிப்பாக, ஆரோக்கியம் என்பது நமது உடல் சார்ந்தது மட்டுமல்ல. நமது உள்ளம் சார்ந்ததும் தான்.

அதன்படி ஆரோக்கியத்துடனுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ என்னென்ன விடயங்களை செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது நமது அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாகும். எனவே நீங்கள் தினசரி காலையில் உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்வதால் உங்களது தினசரி வேலைகளை முன்பை விட மிக கவனமாகவும், தெளிவாகவும் , வேகமாகவும் செய்ய பழக்கப்படுத்திக் கொள்வீர்கள்.

உணவு

உணவுகளை கட்டாயம் தவிர்க்காமல் சாப்பிடுங்கள். அலுவலகம், பள்ளி, கல்லூரி போன்றவற்றிற்கு தாமதமாகிவிட்டது என்று சாப்பிடாமல் செல்வது கூடவே கூடாது.. ஒவ்வொன்றிற்கும் இந்த இந்த நேரம் என்று தனித்தனியாக ஒதுக்க வேண்டியது அவசியமாகும்.

தேவையற்ற வேலைகள்

உங்களது வாழ்க்கையில் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் நிறைய இருக்கும்.எனவே நீங்கள் செய்யும் தேவையற்ற வேலைகள் எது என்று கண்டறிந்து அவற்றை செய்யாமல் இருக்கலாம். அல்லது அந்த வேலைக்கான நேரங்களை சுருக்கிக் கொள்ளலாம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சியான உரையாடல்கள், சந்தோஷமான தருணங்கள் போன்றவற்றை நீங்கள் தவறவிட வேண்டாம். நகைச்சுவை உணர்வு என்பது மிகவும் அவசியமானதாகும்.. எனவே எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்

ஆசைகள்

மனதில் ஆசைகள், இலட்சியங்கள் இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் மனதில் பேராசைகளை வளர்த்துக் கொண்டு அவற்றை அடைய முடியாத பட்சத்தில் அது நடக்கவில்லையே என்று இருக்கும் கொஞ்ச நாட்களை வருத்தம் மற்றும் கவலையுடன் கழிக்காதீர்கள்.

தியானம்

தியானம் செய்வது உங்களது மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன்பும் சில நிமிடங்கள் தியானம் செய்வதால் உங்களது மன சுமைகள் குறைந்து.

மன அமைதியாகும். மன இறுக்கம் இல்லாமல் வாழ்வதால் உங்களது நாள் ஆனந்தமான நாளாக அமைவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கையையும் வாழலாம்.