கருப்பட்டியின் நன்மைகள்!

201810170847281742 karuppati medical benefits SECVPF
201810170847281742 karuppati medical benefits SECVPF

நம் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான இடம் பிடித்த ஒன்று கருப்பட்டி. இன்று இந்த கருப்பட்டியை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக காணப்படுகின்றது . ஆனால் இதில் அடங்கியுள்ள எண்ணற்ற பலன்களைப் பற்றி அறிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் இதனை மீண்டும் பயன்படுத்த தொடங்குவீர்கள்.

கருப்பட்டியின் பயன்கள்

  • ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை சரிசெய்துவிடும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை குணப்படுத்தும்.
  • கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் வலுவாகும்.
  • பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெற்றுவிடும்.
  • காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கும். மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடித்து வரலாம்.
  • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறலாம். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்குமாம்.
  • நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறைந்து விடும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கும்.