தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

IMG 20170319 WA0013
IMG 20170319 WA0013

தோசை உணவை விரும்பாதவர்களை காண்பது அரிது, அந்த அளவுக்கு அதை பலரும் விரும்பி உண்பார்கள்.

தோசை சாப்பிடுவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

எடையை குறைக்க

பொதுவாக தோசை மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் எந்தவிதமான கூடுதல் திணிப்புகளும் இல்லை. ஓட்ஸ் மற்றும் தானியங்களில் தோசை சுடுவது குறைவான கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாகவும், எடை குறைப்பிற்கும் வழிவகுக்கிறது. எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக தோசையை சாப்பிடலாம்.

எளிதான செரிமானம்

தோசை இயற்கையான பொருள்களின் மூலம் தயாரிக்கப்படுகிறது . மேலும் மாவானது குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் வரை புளிக்க வைக்கப்படுகிறது. இதன்மூலம் இதில் தாவர புரோட்டின்கள் அதிகரிக்கிறது. இதிலிருக்கும் நொதித்தல் விளைவாக இது விரைவில் செரிமானம் அடைகிறது.

எலும்புகளுக்கு நல்லது

தோசையின் மூலப்பொருட்களில் கல்சியம் மற்றும் இரும்புசத்து இருப்பதால் உடலை வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் தோசையை சாப்பிடலாம்.

கொழுப்பு

தோசை ஒரு ஆரோக்கியமான உணவாகும், ஏனெனில் இது மிகவும் குறைவான நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டுள்ளது, இது அதிக நிறைவுற்ற கொழுப்பு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதால் இது ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.