சற்று முன்
Home / பொதுக்குரல் / ஜோதிடம் / 31.03.2020 ராசி பலன்கள்

31.03.2020 ராசி பலன்கள்

மேஷம் – குடும்பத்தில் ஒற்றுமையுடன் கூடிய மகிழ்ச்சி இருக்கும். உற்சாக மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். பணவருமானம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகள் விரும்பிக் கேட்ட பொருளை வாங்கித் தருவர்.

ரிஷபம் – பேச்சு, செயலில் தயக்கம் ஏற்படலாம். கடினப் பணிகளில் தகுந்த தற்காப்பை பின்பற்ற வேண்டும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அவசியமற்ற வகையில் கடன் பெற வேண்டாம். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

மிதுனம் – அதிக மதி நுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

கடகம் – வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள் தரமறிந்து உண்பது நல்லது. மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர்.

சிம்மம் – இரக்க குணத்தால் எல்லோருக்கும் உதவுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை செழிக்க தேவையான மாற்றத்தை செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிந்து நிர்வாகத்திடம் பாராட்டு, பரிசு பெறுவர்.

கன்னி – நற்குணம் உள்ளவரின் நட்பு கிடைக்கும். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். பணவரவில் சேமிப்பீர்கள். குடும்ப விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும்.

துலாம் – வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் செழிக்க கிடைக்கும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்த வேண்டும். பணச்செலவில் சிக்கனத்தை பின்பற்றவும். மாற்றுச் சிந்தனையாளரிடம் விலகுவது மிகுந்த நன்மை தரும்.

விருச்சிகம்- எதிலும் நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். சான்றோர்களின் ஆசி கிடைக்கும். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். சராசரி அளவில் பணவரவு உண்டு. வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு ஏற்படலாம்.

தனுசு – செயலில் நேர்த்தியும், கலைத்திறனும் நிறைந்திருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டு. நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் – தர்ம சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து புதிய வளர்ச்சிப் பரிமாணம் உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் – மனசாட்சிப்படி நடந்து குடும்ப பெருமையை காப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகும் குளறுபடியை மாற்று உபாயத்தால் சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

மீனம் – மனசாட்சிப்படி நடந்து குடும்ப பெருமையை காப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகும் குளறுபடியை மாற்று உபாயத்தால் சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும்

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர் கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை ...