சற்று முன்
Home / பொதுக்குரல் / ஜோதிடம் / 03.04.2020ராசி பலன்கள்

03.04.2020ராசி பலன்கள்

மேஷம் – தந்தையால் நன்மை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். செல்வாக்கு உயரும். சிபாரிசுக்குப் பலன் இருக்கும். வெளிநாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. உத்தியோகம் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம் – வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள பிள்ளைகள் வருவர். பழைய நண்பர்களைச் சந்திப்பது உற்சாகம் தரும். பேச்சில் நிதானம் தேவை. சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்வீர்கள். குழந்தைகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். ஓய்வு நேரம் கூடுதலாகும்.

மிதுனம் – வழிபாட்டு தலங்களுக்கு செல்வீர்கள். வாழ்வில் இனிய அனுபவங்கள் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். வீடு கட்டுவீர்கள். பலநாள் குழப்பங்கள் தீரும். எதிரியுடன் பேசி சமாதானம் ஆவீர்கள். பொழுதுபோக்கில் ஆர்வம் கூடும்.

கடகம் – கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பணியிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. தாய் வழி உறவினருடன் நெருக்கம் அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்பட்டு பின் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம் – பணியிடத்தில் தலைமைப் பொறுப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளைப் பற்றிய கவலை தீரும். துரோகிகளை இனம் கண்டு கொள்வீர்கள். பொழுது போக்கு அம்சங்களில் கவனத்தைக் குறைப்பது நல்லது. காதல் விவகாரங்களில் ஈடுபடுவீர்கள்.

கன்னி – பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும் விதத்தில் அமையும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். செளபாக்கியங்கள் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் சேரும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். நீண்டகால பிரச்னைகள் நல்ல முடிவை எட்டும்.

துலாம் – வசதி வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பை பெறுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம் – வீடு கட்டும் வேலைகளை நல்ல முறையில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார நிலைமை உயரும். மகன், மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

தனுசு – காத்திருந்த தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். பணியிடத்தில் நிதானித்து பேசுவது நல்லது. எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் – வீட்டில் உள்ள பெரியோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். உங்களின் பிசினஸ் வெற்றியை தேடி தரும். பொருளாதார உயர்வு ஏற்படும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

கும்பம் – கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் தேடி வரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. பண விஷயத்தில் நிதானம், பொறுமை தேவை. பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மீனம் – ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். படைப்பாளிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். சமூக வலைத் தளங்களில் கவனமாக இருங்கள். புதியவர்களுடனான பேச்சைக் குறைக்கவும். யாரைப் பற்றியும் வம்பு பேச வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும்

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர் கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை ...