உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள்!

4 ess
4 ess

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கௌரவம் உண்டாகும் நாள்.

ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சிதங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்கள் மீது
சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்: உற்சாகமாக எதையும் செய்ய தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அழகும், இளமையும் கூடும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும்.பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சினைகள் வரக்கூடும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.