சற்று முன்
Home / பொதுக்குரல் / ஜோதிடம் / 01.06.2020 இன்றைய ராசி பலன்கள்
rasi palan 1589167686
rasi palan 1589167686

01.06.2020 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீண்ட நாளாக இருந்து வந்த தடைகள் விலகி நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்

வருமானம் திருப்திகரமாகும். உறவினர்களால் உதவி கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

மிதுனம்

பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

கடகம்

ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பெண்களுக்கு திட்டமிட்ட விஷயங்கள் நடப்பதில் தாமதம் ஏற்படும். சிறு அளவில் கடன் பெறுவீர்கள். மாணவர்களின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்

மேலதிகாரிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும். தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.

கன்னி

அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் பெண்கள் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்

துலாம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். மேலதிகாரியின் விருப்பங்களை நிறைவேற்றி பாராட்டைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

வாகன வகையில் சிறு அளவில் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும்.

தனுசு

தன்னம்பிக்கையுடன் பொது நல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டைப் பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்த எண்ணம் நிறைவேறும்

மகரம்

உத்தியோகத்தில் நீண்டநாளைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். கலைஞர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

கும்பம்

உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பெண்கள் புதிய நட்பால் உற்சாகமடைவர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் கூடுதல் லாபத்தை பெறலாம்.

மீனம்

நிலுவைப் பணிகளை எளிதாக முடித்து நிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.

x

Check Also

rasi palan 1589167686 5

26.06.2020 இன்றைய ராசிபலன்

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசிய செலவுகளை ...