06.06.2020 இன்றைய ராசிபலன்

DIKWd1GVoAAuL8W 1
DIKWd1GVoAAuL8W 1

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினை களை நினைத்து பார்த்து கோபம் மட்டும் கொண்டிருக்காதீர்கள். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்துவேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.

கடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற முடிவிற்கு வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்:  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைத்ததை முடித்து காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்: கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களை மதிப்பார். மாற்றங்கள் நிறைந்த நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு நஷ்டங்கள் வந்து போகும். உத்தியோகத்தில்  மறதியால் பிரச்னைகள் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்வது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள்வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் ஏற்படும் நாள்.

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும் யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

மீனம்: குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலவும். மனைவி உடல்நிலை சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும் நாள்.