Home / பொதுக்குரல் / ஜோதிடம் / 26.06.2020 இன்றைய ராசிபலன்
rasi palan 1589167686 5

26.06.2020 இன்றைய ராசிபலன்

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதியசலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

கடகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். மனதில் பட்டதைபளிச் சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகாதீர்கள்.. மற்றவர்களுக்காக பரிந்து பேசி சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல்,அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

துலாம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.

தனுசு: கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும்.
அலுவலகத்தில் மரியாதை கூடும். திடீர் திருப்பம்நிறைந்த நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்துஉயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனவசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

x

Check Also

rasi palan 5

07.07.2020 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். ...