29.06.2020 இன்றைய ராசிபலன்

rasi palan 1

மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுபொருள் வந்து சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுபநிகழ்ச்சிகளும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நீண்ட நாள் முயற்சியில் சில காரியங்கள் முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனம் தேவை. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். திட்டம் நிறைவேறும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வாகன வசதி பெருகும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.