12 ராசிகளில் இன்று யாருக்கு அதிஸ்டம்

rasi
rasi

மேஷம்: – மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம்   இருப்பதால் பழைய பிரச்சினைகள் மீது கோபப்பட்டு கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில்  சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே உங்கள் பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

கடகம்:- கடக ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தில் உள்ளவர்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே உங்கள்-புதிய திட்டங்கள் நிறை வேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: — கன்னி ராசிக்காரர்களே உங்கள் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களே நீங்கள்  துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் விஐபி.க்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களே கணவன் மனைவிக் குள் அன்பும், ஆதரவும் அதிகரிக் கும். தோற்றப் பொலிவுக் கூடும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள் . உத்தியோகத்தில் புது அதிகாரிகள் உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

தனுசு:-தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப் பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரம்:- மகர ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வேண்டாம். சிறப்பான நாள்.

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையை புரிந்து கொள்வீர்கள், உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

மீனம்:- மீன ராசிக்காரர்களே உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் உயரும் நாள்.