உங்களுக்கு இன்றைய நாள் எப்படி அமைந்திருக்கு

images 8
images 8
aries 01 3
aries 01 3

மேஷம்- :மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததை போல் ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களிடம் கனிவாக பழகுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

taurus 02 3
taurus 02 3

ரிஷபம்:–  ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களுடன் மனஸ் தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

gemini 03 3
gemini 03 3

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

cancer 04 1 1
cancer 04 1 1

கடகம்:- கடக ராசிக்காரர்களே உங்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்பு களையும் பயன்படுத்தி கொண்டு முன்னேறுவீர்கள். நண்பர்கள் உற வினர்களின் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சாதிக்கும் நாள்.

leo 05 3
leo 05 3

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய பாதை தெரியும் நாள்.

virgo 06 3
virgo 06 3

கன்னி:-கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்ப தால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்

libra 07 3
libra 07 3

துலாம்: – துலாம் ராசிக்காரர்களே நீங்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் புது வேலை யாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

scorpio 08 3
scorpio 08 3

விருச்சிகம்: -விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

sagittarius 09 3
sagittarius 09 3

தனுசு:–தனுசு ராசிக்காரர்களே நீங்கள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமைபடைக்கும் நாள்.

capricorn 10 3
capricorn 10 3

மகரம்: -மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

aquarius 11 3
aquarius 11 3

கும்பம்: – கும்ப ராசிக்காரர்களே நீங்கள்  சவால்கள் விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளை களால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

pisces 12 3
pisces 12 3

மீனம்: மீன-ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார் கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.