சற்று முன்
Home / விளையாட்டு / மூன்றாவது போட்டியில் 296 ஓட்டங்களை குவித்த இந்தியா!
download 2 2
download 2 2

மூன்றாவது போட்டியில் 296 ஓட்டங்களை குவித்த இந்தியா!

ராகுலின் வழமையான சிறப்பான துடுப்பாட்டத்தினால் நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 296 ஓட்டங்களை குவித்துள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

அதன் பின்னர் இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை தன் வசப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று(11) ஆரம்பமாகியுள்ளது.

இரு அணிகளும் இன்று மோதுவது 110 ஆவது ஒருநாள் போட்டியாகும்.

இதுவரை நடந்த 109 போட்டிகளில் இந்திய அணி 55 ஆட்டங்களிலும், நியூசிலாந்து அணி 48 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

5 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஒரு ஆட்டம் சமனிலை ஆனது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் பிரித்வி ஷா 40 ஓட்டங்களையும், மயங்க் அகர்வால் ஒரு ஓட்டத்தையும், விராட் கோலி 9 ஓட்டங்களையும், ஸ்ரேஸ் அய்யர் 62 ஓட்டங்களையும், ராகுல் சிறப்பாக விளையாடி 113 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டே 42 ஓட்டங்களையும், சர்துல் தாகூர் 7 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ஜடேஜா 8 ஓட்டங்களையும், நவ்தீப் சைனி 8 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 4 விக்கெட்டுக்களையும், ஜேமிசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றின

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

1427259521 4701

இந்த முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும்-பிரெட் லீ

ஐ.பி.எல் இருபதுக்கிருபது கிரிக்கெட் தொடர் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. இதில் ஏழு முறை சென்னை ...