வீரர்களுக்கு ஐசிசி விடுத்துள்ள எச்சரிக்கை!

.jpg
.jpg

உலகெங்கும் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை பயன்படுத்தி ,ஆட்ட நிர்ணய சதிக்கும்பல்களை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் வீரர்களை சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்புகொள்ள முயல்கின்றனர் என ஐசிசி எச்சரித்துள்ளது.

இது குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்சல் தெரிவித்துள்ளார்.

மேலும் மார்ச் (15) ஆம் திகதிக்கு பின்னர் எந்த சர்வதேச போட்டிகலும் இடம்பெறவில்லை. சர்வதேச வீரர்கள் முடக்கல் நிலைக்குள் சிக்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுகின்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களை இலக்குவைக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னர் எப்போதையும் விட அதிகமாக சமூக ஊடகங்களில் வீரர்கள் காணப்படுகின்ற இந்த தருணத்தை ஊழல்பேர்வழிகள் பயன்படுத்த முயல்வதை அவதானித்துள்ளோம் என மார்சல் கூறியுள்ளார்.

வீரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி உறவுகளை ஸ்தாபிப்பதற்கு அவர்கள் முயல்கின்றனர் பின்னர் இந்த தொடர்பினை பயன்படுத்தலாம் என்பதே அவர்களின் நோக்கம் என அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தற்காலிகமாக சர்வதேச – உள்ளுர் போட்டிகளிற்கு தடைவிதித்திருக்கலாம் ஆனால் ஊழல்கும்பல் தொடர்ந்து செயற்படுகின்றது என அலெக்ஸ் மார்சல் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் எங்கள் உறுப்பினர்கள் வீரர்கள் மற்றும் பரந்துபட்ட வலையமைப்புகளை தொடர்புகொண்டு இதனை தெரிவிப்பதற்கும் இந்த ஆபத்தை தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.