சற்று முன்
Home / விளையாட்டு / டோனியின் அதிரடி உண்மை!

டோனியின் அதிரடி உண்மை!

மனநல ஆலோசகர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று டோனி கூறியுள்ளார்.

முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த எஸ்.பத்ரிநாத் தனது நண்பருடன் இணைந்து விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை சமாளித்து சாதிக்க உதவுவதற்காக “எம்போர” என்ற அமைப்பை ஏற்பத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தமட்டில் மனநலம் சார்ந்த சில பலவீனங்கள் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது இன்றும் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.

பொதுவாக நாம் அதனை மனநோய் என்று குறிப்பிடுகிறோம். துடுப்பாட்டத்தின் போது முதல் 5-10 பந்துகளை எதிர்கொள்ளும் போது எனது இதயத்துடிப்பு அதிகரித்து காணப்படும். அப்போது எனக்கு நெருக்கடியும், இலகுவான அச்சமும் ஏற்படும். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இதுபோல் இருக்க தான் செய்யும். ஆனால் இந்த உண்மையை யாரும் சொல்வதில்லை. அதனை எப்படி சமாளிப்பது என்று எல்லோரும் சிந்திப்பார்கள்.

அது ஒரு சிறிய பிரச்சினை தான். ஆனால் பல சமயங்களில் இதனை பயிற்சியாளரிடம் சொல்ல நாம் தயக்கம் காட்டுவோம். இதனை சமாளிக்க மனநல ஆலோசகர் வேண்டும். மனநல ஆலோசகர் என்பவர் 10, 15 நாட்கள் மட்டும் அணியுடன் இருப்பவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவரால் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். மனநல ஆலோசகர் எப்போதும் அணியுடன் நிலையாக இருக்க வேண்டியது அவசியமானதாகும் என்று அவர் தெரிவித்தா.

x

Check Also

ஓராண்டுக்கு நீட்டிக்கப்படவுள்ள சங்கக்காரவின் பதவி!

லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பிற்கு (எம்.சி.சி.) தலைவராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா உள்ளார். ...