பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் பிரதம நிறைவேற்று அதிகாரி வசிம்கான் – அதிரடி முடிவு!

 கான்
கான்

உலகில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் குறித்து உடனடியாக முடிவு எடுக்க மாட்டோம் என பாகிஸ்தான கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

மேலும் இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை முதலாம் (01) திகதி வரை விளையாட்டு போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் அணி ஜூலை (30) ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் பிரதம நிறைவேற்று அதிகாரி வசிம் கான் கூறுகையில்,

‘வீரர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

தற்போது இங்கிலாந்தில் மோசமான நிலை நிலவுகிறது. அவர்களுடைய திட்டம் குறித்து நாங்கள் கேட்டுள்ளோம். நாங்கள் எந்தவொரு முடிவையும் எடுக்க மாட்டோம். ஆனால், அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் மதிப்பீடு செய்து முடிவு எடுப்போம்’ என தெரிவித்துள்ளார்.