சற்று முன்
Home / விளையாட்டு / இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க தொடர்ந்தும் விளக்கமறியல்
unnamed 2
unnamed 2

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க ஜூன் 9 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிடி நீதவான் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஷெஹான் மதுஷங்க பன்னல பொலிஸாரால் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தினை அடுத்து ஷெஹான் மதுஷங்க, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

x

Check Also

images 21

விசாரணை இடம் பெறுகின்றது; ஊடகங்கள் அமைதி காக்கவும்!

06 பக்கங்களில் முறைப்பாடு வழங்கியதாகமஹிந்தானந்த அறிவிப்பு “(2011)ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் ...