மேற்கிந்திய அணியின் முன்னாள் கப்டன் டரன் சமியின் புகார்!

.jpg
.jpg

இலங்கை வீரர் திசர பெரேராவையும் தன்னையும் கறுப்பன் என ஐ.பி.எல் தொடரில் அழைத்ததாக மேற்கிந்திய அணியின் முன்னாள் கப்டன் டரன் சமி புகார் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மேற்கிந்திய அணியின் கப்டன் டரன் சமி. இரு முறை தனது அணிக்கு (ரி20) உலக கோப்பை (2012, 2016) வென்று கொடுத்தவர்.

ஐதராபாத் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் (2013-14) இல் விளையாடினார். அப்போது இவரை காலு என அழைத்துள்ளனர்.
இதற்கு இந்தியில் கறுப்பர் என அர்த்தம்.
இது சமிக்கு அப்போது தெரியாதாம். சமீபத்தில் ”பேட்ரியாட் ஆக்ட்” என்ற இணையதள நிகழ்ச்சி தொடரை பார்த்துள்ளார். அதில், இந்திய வீடுகளில் கறுப்பாக இருப்பவர்களை ”காலு” என்று கேலியாக அழைப்பதை அறிந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொய்ட் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த சமி அநீதிக்கு எதிராக ஐ.சி.சி குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்.

ஐ.பி.எல் தொடரில் தனக்கு நேர்ந்த இனவெறி பாதிப்பு குறித்து ஆவேசமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது என்னையும் இலங்கையின் திசர பெரேராவையும் காலு என அழைப்பர். சக்திவாய்ந்த பொலிக்குதிரை அல்லது வலுவான கறுப்பு மனிதர் என அழைப்பதாக நினைத்தேன். தற்போது உண்மையான அர்த்தம் தெரிந்தது. கேலியாக அழைத்துள்ளதை உணர்ந்து மிகுந்த கோபம் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டியில் இனவெறியை தூண்டும் வகையில் அழைத்தது யார் எப்போது அழைத்தனர் என்ற விவரங்களை சமி வெளியிடவில்லை.