லாலிகா: வெலன்ஸியா அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட் அணி!

1221051550.jpg.0 720x450 1

லாலிகா கால்பந்து தொடரின் வெலன்ஸியா அணிக்கெதிரான லீக் போட்டியொன்றில், ரியல் மாட்ரிட் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

அல்ஃபிரடோ டிஸ்டெபனோ விளையாட்டரங்கில், உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ரியல் மட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இதன்படி இரு அணிகளும் முற்பாதியில் கோல் எதுவும் அடிக்காவிட்டாலும், போட்டியின் பிற்பாதியில் அணியின் நட்சத்திர வீரரான கரீம் பென்ஸிமா அணிக்காக இரண்டு கோல்களை அடித்தார்.

போட்டியின் 61ஆவது மற்றும் 86ஆவது நிமிடங்கள் என இரண்டு கோல்களை கரீம் பென்ஸிமா புகுத்தி அணியின் வெற்றிக்கு துணை நின்றார்.

அதேபோல, அணியின் மற்றொரு வீரரான மார்கோ அசன்ஸியோ போட்டியின் 74ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதற்கமைய போட்டியின் இறுதியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில், ரியல் மட்ரிட் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

லாலிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை ரியல் மாட்ரிட் அணி 62 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வெலன்ஸியா அணி 43 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது.