சற்று முன்
Home / விளையாட்டு / அதிக விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!
1592806953 rajinder 2

அதிக விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!

ரஞ்சி கிண்ண போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் வீரர் ரஜிந்தர் கோயல் உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 77.

இடக்கை சுழற்பந்துவீச்சாளரான ரஜிந்தர், 157 முதல்தர ஆட்டங்களில் 750 விக்கெட்டுகளை எடுத்து, ரஞ்சி கிண்ண போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். பெரும்பாலான ஆட்டங்களை ஹரியாணாவுக்காக விளையாடினார். 1958-59 சீஸனில் தொடங்கி 1984-85 வரை விளையாடிய ரஜிந்தர், 53 முறை 5 விக்கெட்டுகளையும் 17 முறை 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இத்தனை முதல்தர ஆட்டங்களில் விளையாடி பல ஆண்டுகள் தாக்குப்பிடித்தும் ரஜிந்தரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம், 1960 களில் பிஷன் சிங் பேடி இந்திய அணியில் தனது இடத்தை வலுவாகத் தக்கவைத்திருந்தார். 1964-65 இல் இலங்கை அணிக்கு எதிராக அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் ரஜிந்தர் விளையாடியுள்ளார்.

43 வயது வரை நல்ல உடற்தகுதியுடன் விளையாடிய ரஜிந்தரின் மறைவுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

x

Check Also

sangakkara

விசாரணை பிரிவில் ஆஜராகவுள்ள சங்கக்கார!

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் போது ஸ்ரீலங்கா அணியின் ...