சற்று முன்
Home / விளையாட்டு / லா லிகா: மல்லோர்கா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியில் முதலிடத்தை பிடித்தது ரியல் மட்ரிட் அணி!
real madrid 240620w 720x450 1

லா லிகா: மல்லோர்கா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியில் முதலிடத்தை பிடித்தது ரியல் மட்ரிட் அணி!

லாலிகா கால்பந்து தொடரின் மல்லோர்கா அணிக்கெதிரான லீக் போட்டியில், ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

அல்ஃபிரடோ டி ஸ்டெபனோ விளையாட்டரங்கில், உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரியல் மட்ரிட் அணி, போட்டியின் 19ஆவது நிமிடத்தில், இளம் வீரரான ஜூனியர் வினிசியஸின் துணையுடன் முதல் கோலை புகுத்தியது.

இதன்பிறகும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ரியல் மட்ரிட் அணி 56ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தது. இந்த கோலை செர்ஜியோ ராமோஸ் அடித்தார்.

மேற்கொண்டு மல்லோர்கா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாததால், போட்டியின் இறுதியில் ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

லா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, ரியல் மட்ரிட் அணி 68 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மல்லோர்கா அணி 26 புள்ளிகளுடன் 18ஆவது இடத்தில் உள்ளது.

x

Check Also

sangakkara

விசாரணை பிரிவில் ஆஜராகவுள்ள சங்கக்கார!

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் போது ஸ்ரீலங்கா அணியின் ...