சற்று முன்
Home / விளையாட்டு / அமெரிக்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் முதல் நிலை வீராங்கனை விலகல்
03c0f8f54476f9a120b8966b863b9430
03c0f8f54476f9a120b8966b863b9430

அமெரிக்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் முதல் நிலை வீராங்கனை விலகல்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகுவதாக அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், சம்பியன் பட்டம் வென்ற 24 வயதான ஆஷ்லி பார்ட்டியின் இந்த முடிவு இரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நானும், எனது அணியினரும் சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் மற்றும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்காக இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மற்றும் சின்சினாட்டி இரண்டும் எனக்கு பிடித்தமான தொடர்கள். ஆனால் கொரோனா காரணமாக அங்கு சென்று விளையாடுவதில் குறிப்பிடத்தக்க அபாயம் இன்னும் உள்ளது. இதனால் வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன்.

அடுத்த ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். செப்டம்பர் மாதம் நடக்கும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் கலந்து கொள்வது குறித்து இனி வரும் வாரங்களில் முடிவு செய்வேன்’ என கூறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 13ஆம் திகதி வரை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே முன்னணி வீராங்கனைகளான சிமோனா ஹாலெப் மற்றும் பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஆகியோரும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

x

Check Also

download 3 2

வீரர்களுக்கான சுகாதார விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டும்-ரோஹித் சர்மா

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது வீரர்களுக்கான சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டுமென ...