இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 139-2 ஓட்டங்கள் குவிப்பு!

test 720x380 1

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், பாபர் அசாம் 69 ஓட்டங்களுடனும், ஷான் மசூத் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்செர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, நேற்று (புதன்கிழமை) மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 49 ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இந்தநேரத்தில், பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் எட்டு விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை இன்று பாகிஸ்தான் அணி தொடரவுள்ளது.