IPL போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி

download 10 1
download 10 1

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த இந்திய மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே வெளிநாடுகளில் கிரிக்கட் தொடரை நடத்த இந்திய மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுக்களின் அனுமதி தேவையாக இருந்தது.

இதில் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சுக்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.