சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் நியூசிலாந்தில் ஆரம்பம்!

pg16 New Zealan
pg16 New Zealan

கொரோனா காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கட் போட்டிகளை எதிர்வரும் கோடை காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் நியூசிலாந்துக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கட் சபை தற்போது குறித்த அணிகளின் வருகைக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தொடரொன்றில் பங்கேற்கவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்பிக்கப்பட்டாலும் இங்கிலாந்து கிரிக்கட் சபை தற்போது பின்பற்றிவரும் அதே சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கு நியூசிலாந்து கிரிக்கட் சபை அவதானம் செலுத்தியுள்ளது.