சற்று முன்
Home / விளையாட்டு / பாகிஸ்தானுக்கெதிரான T20 தொடர் அவுஸ்ரேலியா வசம்

பாகிஸ்தானுக்கெதிரான T20 தொடர் அவுஸ்ரேலியா வசம்

அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 03 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்குபற்றுகிறது. தொடரில் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி இன்று நடைபெற்ற 3வது போட்டியிலும் மிகவும் சுலபமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 8விக்கட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக இப்திகார் அஹமட் மாத்திரம் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 11.5 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட்டும் இழப்பின்றி, வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.

அவுஸ்ரேலிய அணி சார்பில் ஆரம் துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் ஆரோன் பின்ச் 52 ஓட்டங்களையும், வோர்னர் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலியா அணியின் சீன் அபோட் தெரிவு செய்யப்பட்டார்.தொடராட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்படார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு பதில் மெழுகு!

கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில், வியர்வையை பயன்படுத்துவதற்கு மாற்றாக ஆஸ்திரேலிய நிறுவனம் புதிய மெழுகு ...