திருமுருகன் காந்தி மீதான குற்றச் சாட்டுக்கள்தொடர்பில் அறிவுறுத்து !

t 1 7
t 1 7

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணுவின் ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருமுருகன் காந்தி மீது 40-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் . அவர் கலந்துகொண்டு பேசிய அனைத்து கூட்டங்களுக்கும், அனுமதி பெற்று நடத்திய ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திற்கும் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் . தற்போது அந்த வழக்குகளை எல்லாம் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியிருக்கிறது என்றும் . அரசியல் ரீதியாக ஜனநாயகப் போராட்டங்களை நடத்தியதற்காக ஒருவர் மீது சிபிசிஐடி விசாரணை என்பது மோசமான அணுகுமுறையாகும் எனவும் கூடடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது ..

மக்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் திருமுருகன் காந்தியையும், அவர் சார்ந்திருக்கும் மே பதினேழு இயக்கத்தினையும் முடக்குவதற்கான வேலையினை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்து கொண்டிருக்கிறது.

திருமுருகன் காந்தி மீதான அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஜனநாயக ரீதியான எதிர்ப்பினை பதிவு செய்யும் போராட்டத்தினை நடத்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது .