மோடி விழுந்த படியை அளந்து, இடிக்க உத்தரவிட்ட அரசு!

Modi
Modi

இந்திய பிரதமர் மோடி, தடுக்கி விழுந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படவும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கான்பூரில் நடந்த கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது படி ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து உதவி செய்தனர்.

இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகளை விட உயரமாக இருந்து உள்ளது இதனால் அவர் தடுக்கி விழ நேர்ந்தது.

இந்நிலையில் அந்தப் படிக்கட்டுகளை இடித்துவிட்டுக் சீரமைக்க உத்திரபிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.