நளினி தற்கொலைக்கு முயற்சி!

nalini
nalini

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் புகழேந்தி, சக கைதியுடன் நளினி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது சிறை காவலர் ஒருவர் தலையிட்டதால் தான் தற்கொலை செய்துகொள்வதாக நளினி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியை விரைவாக புழல் சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்யும்படி ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் தன்னை கேட்டுக்கொண்டதாகவும் வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏழு பேரில் நளினி தொரப்பாடியில் உள்ள வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றக் கோரியிருந்தார். ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் நளினிக்கு வேலூர் பெண்கள் தனிச் சிறையில் பாதுகாப்பு இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.