கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் இருந்து 500 காணொளிகள் நீக்கம்!

Karuppar Kooddam
Karuppar Kooddam

கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த 500இற்கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தளத்தை முடக்க வேண்டும் என யூ-ரியூப் நிறுவனத்திற்கு சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் தளத்தை ஒட்டுமொத்தமாக யூ-ரியூப் நிறுவனம்தான் முடக்க முடியும் என்றும் இருப்பினும் அதில் சர்ச்சைக்குரிய காணொளிகள் பல இருப்பதாலும் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகள் மேலும் ஏற்படக் கூடும் என்று கருதுவதாலும் பொதுமக்கள் யாரும் அந்தக் காணொளிகளைப் பார்க்க முடியாதவாறு நீக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சை வழக்கில் கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தள நிர்வாகிகளான சுரேந்திரன் நடராஜன், செந்தில் வாசன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிற்றர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.