பண்பாடு மறந்தால் பாழாகும் பூமி – குஞ்சாத்தையும் குமரேசனும்

Karuththu kalam
Karuththu kalam

உலகிலுள்ள,பல பண்பாடுகளுள் சிறந்ததும் முதன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடே ஆகும்.

தமிழ் கலாசாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது.

தமிழ் கலாசாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், மூலம் அறிவியலை வெளிப்படுத்துகிறது மற்றும் பழந்தமிழரின்தொழில்நுட்பம் இன்றைைய தொழில்நுட்ப வல்லுநர்களை அதிசயிக்கச் செய்கிறது.

தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, , கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் மூலமாகவும் நம் சடங்குகளின் மூலமாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.

எங்கள் பண்பாட்டை சிதைக்கவோ திசை திருப்பவோ நாம் அனுமதிப்போமாயின் அது நம் சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரும் வரலாற்று துரோகமாகும் .- எங்கள் தமிழ்க்குரல் ஊடகம் தமிழரின் பண்பாட்டை தமிழரின் விழிமியங்களை எப்போதும் கட்டிக்காக்க பாடுபடும் எம் இந்த முயற்சி தொடர்பாக எமக்கு நீங்கள் கூறவிரும்பும் கருத்துக்களை இந்த காணொலி பதிவின்கீழ் குறிப்பிடுங்கள்