யாழ். மாநகர சபை முதல்வராக லோகதயாளன்

Election risult 2
Election risult 2

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் லோகதயாளன் நியமிக்கப்படலாம் என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைய மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்க கட்சி பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதனால் யாழ். மாநகர மேயரின் பதவி காலியாகிவிடும்.

யாழ். மாநகர சபை பட்ஜெட் தோல்வியடைந்த நிலையில், அடுத்த வாசிப்புக்களிலும் தோல்வியடைந்தால் மேயராக ஆர்னோல்ட் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது. புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில் ஆர்னோல்ட் மேயர் பதவியில் தொடர்வது என்பது சந்தேகம்தான். இதனால், அவரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்கும் நோக்கில் அவரின் அரசியல் குரு சுமந்திரன் இந்த வேலைத் திட்டத்தை எடுத்துள்ளார் என்கிறார்கள் கட்சியினர்.

இதனால், காலியாகும் மேயர் பதவிக்கு மூத்த உறுப்பினர்களை விட லோகதயாளன் நியமிக்கப்படலாம் என்கின்றார்கள் விடயம் தெரிந்தவர்கள். ஊடகவியலாளரான லோகதயாளன் சுமந்திரன் எம்.பியின் சிபாரிசு ஊடாக வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தின் முன்மொழிவில் அரசியலுக்குள் நுழைந்தர். “சுத்துமாத்து” அரசியலை நன்கு தெரிந்தவர். இதனால் அவர் மேயராவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் பிரகாசமாகவே உள்ளன என்கிறார்கள் உள்வீட்டார்.