வாக்குத் தவறிய கஜேந்திரகுமார் – நினைவிருக்கிறதா தமிழ் தேசியப் பேரவை?

TN
TN

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேர்மையில்லாதவர்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறியவர்கள் என்று நித்தமும் விமர்சிக்கும் கஜேந்திரகுமார் தரப்பினர், கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றாமல்  இருட்டடிப்புச் செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக   தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை கஜேந்திரகுமார் தரப்பினர் உருவாக்கி இருந்தனர்.

தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுவதாக 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 06ஆம் நாள் புரிந்துணர்வு கைசாத்திடப்பட்டது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் சம உரிமை இயக்கம் என்பன இணைந்து கைசாதிட்டன

தற்காலிக ஏற்பாடாக  மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தேர்தலின் பின்பு தமிழ் தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும் என கூறப்பட்ட போதும் இதில் தலைமை வகித்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டணியானது  வெறுமனே தேர்தலை மாத்திரம் இலக்காக கொண்டு  தனது பரம்பரைக் கட்சியைப் பாதுகாக்க கஜேந்திரகுமாரால் உருவாக்கப்பட்டதா?  என்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2010 ஆம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  ஆரம்பிக்கப்பட்டபோதிலும், தனது தாயின் கட்டளைக்கு இணங்க அந்தக் கட்சியைப் பதிவு செய்யாமல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள கஜேந்திரகுமார், மூன்று வருடங்களுக்கு முன்பு, தமிழ் தேசியப் பேரவையை பதிவு செய்வேன் என்று கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர், தேர்தல் வெற்றிகளுக்காக மாத்திரமே கூட்டணிகளையும் கொள்கை வகுப்புக்களையும் மேற்கொள்ளுவதாகவும் தேர்தல் முடிந்த பின்னர் அவை காற்றில் பறக்க விடப்பட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இச் செயற்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையும் தமது பாரம்பரிய பரம்பரைக் கட்சிகளையும் மாத்திரம் இலக்காக கொண்டு செயற்படுபவர்களால், தமிழ் மக்களுக்காக புதிய கூட்டணியை தோற்றுவிக்க முடியாது என்றும் ஆரோக்கியமான கூட்டணிகளுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2017 இல் தமிழ்த் தேசிய பேரவையால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.