நேர்மைத் திறன் கொண்ட அருந்தவபாலனின் வெற்றி உறுதியானது

aruthavabalan
aruthavabalan

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க. அருந்தவபாலன் போட்டியிடவுள்ளார். சிறந்த ஒழுக்கமும் தலைமைத்துவமும் கொண்ட இவர், கல்வித்திறனும் நிர்வாகத்திறனும் நிறைந்த இவர், அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னலமற்ற அரசியல் மற்றும் சமூக சேவையினால் தமிழ் மக்களின் மனங்களை கவர்ந்த இவரை தமிழ் மக்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கி, தமது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி இன உரிமைக்கான இவரது வலிய குரலை நாம் பயன்படுத்த வேண்டும்.

இன்று தமிழ் தலைமைகள் மத்தியில் தமிழ்த் தேசியம் என்பது வெறும் வாய்ச்சொல்லாக இருக்கின்ற நிலையில், தமிழ் தேசியம் மீது உறுதியான தீராப் பற்றுக்கொண்ட இவர், அதனை தன் வாழ்வாகவும் கொண்டவர். தன்னை தமிழ் இன விடுதலைக்கான பொது வாழ்வில் இட்டவர்.

ஒழுக்கமற்றவர்கள் எமை ஆளுகின்ற சூழலில், அவர்களை வீட்டுக்கு அனுப்பி, சிறந்த ஒழுக்கப் பண்பு கொண்ட இவரை எம் பிரதிநிதியாக நாம் தேர்வு செய்ய வேண்டுமல்லவா? தனி மனித ஒழுக்கமும் மனித நேயமும் இவரது அணிகலன்கள் எனலாம்.

தென்மராட்சியின் புகழ்பூத்த டிறிபேக் கல்லூரியில் பத்து ஆண்டுகள் அதிபராக கடமையாற்றியது மாத்திரமின்றி யாழ்ப்பாணப் பாடசாலைகளிலும் அதிபாக கடமையாற்றி, தனது சிறந்த நிர்வாகத்திறனால் கல்வியில் பல சாதனைகைள புரிந்தவர்.

சிறந்த பொருளியல் ஆசானாகவும் மாணவர் மனங்களில் நிலைத்துவிட்ட இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் இன்று, அரச திணைக்களங்களில் உயர்நிலை உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வருகின்றார்கள். சமூகத்தில் ஆளுமையுள்ள பல நிர்வாகிகளையும் கல்விமான்களையும் இவர் உருவாக்கியுள்ளார்.

இவரால் நிறுவப்பட்ட, அருந்தவபாலன் அறக்கட்டளை நிதியம், போரால் பாதிக்கப்பட்ட, வறிய மாணவர்களுக்கு கை கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகின்றது. அது மாத்திரமின்றி, போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பை நிறுவி, சிறுவர்களை பாதுகாக்கின்ற இம் மண்ணின் காலத் தேவையை புரிகிறார். சொல்லை விட செயலே முதல் என்ற கொள்கையை பற்றி வாழும் இவர், சமூகத்தின் ஆழமான பிரச்சினைகளிலும் விளிம்புநிலை பிரச்சினைகளிலும் கூர்மையான பார்வை கொண்டு செயலாற்றுபவர்.

இளம் வயதிலிருந்தே ஈழ விடுதலைப் போராட்ட சூழலில் அரசியல் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அருந்தவபாலன் அவர்கள், ஒரு சமூகப் போராளியாகவே என்றும் வாழ்ந்து வருபவர். இதற்காக கைது, சித்திரவதை, விசாரணை, அச்சுறுத்தல், நான்காம்மாடி விசாரணைகள் என பல நெருக்கடிகளை சந்தித்தபோதும் தன் அரசியல் நெறி நின்று தடம்புரளாது தீர்க்கமான குரலாய் ஒலிக்கின்றார்.

மேடைகளில் வீரம் பேசும் பலர், தன்னலத்திற்காய் தமிழரசுக்கட்சிக்குள் முடங்கியிருக்கும் வேளையில் மக்களுக்கு எதிரான அக் கட்சி செயற்பாடுகளை நெற்றிக்கு நேரே உரைத்து, அதனைவிட்டு வெளியேறினார். சர்வதேசத்தில் இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்கும் வேலையை எம்மவர்களே செய்தபோது, அதனை சாடினார். அதற்காய் வெகுண்டெழுந்தார். இந்த மண்ணின் ஒவ்வொரு மனித மனங்களும் பேசும் கொதித்தெழுந்து உதிர்க்கும் வார்த்தைகளைத்தான் பேசினார்.

தலைவரின் கொள்கையை உறுதியாய் பற்றி வாழும் இவர், இன்றும் ஓயாமல் தேசத்திற்காய் உழைக்கிறார். பதவிகள் இல்லை. சொகுசு வாகனங்களை அரசிடம் வாங்கவில்லை. இன விடுதலையை பாதையை செம்மைப்படுத்த, சுய நலப் பேர்வழிகளை வீட்டிற்கு அனுப்பி, தன்னலமற்ற வாழ்கை்கையை வாழும் இவர்களை போன்றவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதியாக்க வேண்டியது மக்களின் முதல் கடமை.

நற்போக்கும் நாவன்மையும் நேர்மையும் கொண்ட இவரை இலங்கை தமிழரசுக் கட்சி உள்சதியால் இரண்டு முறை தேர்தல்களில் தோற்கடித்தது. இம்முறை அநீதிக்குத்தான் தோல்வி. இம்முறை பேதமைகளுக்கும் கயமைகளுக்குத்தான் தோல்வி. நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் அவரின் பின்னால் அணிதிரண்டுள்ள அருந்தவபாலன் போன்ற இம் மண்ணின் உன்னத மனிதர்களுக்கும் வெற்றி. அதுவே ஈழத்தவர் வெற்றி.