சுமந்திரனிடம் மண்டியிட்ட சிறீதரன்!

sri
sri

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றொரு பழமொழி நம்மிடையே புழக்கத்தில் உள்ளது. சுமந்திரனின் நேர்காணல் சர்ச்சையால் இரண்டுபட்டு நிற்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனால் கொண்டாட்டத்தில் திளைப்பவர் சிறிதரன் எம்.பி.

சுமந்திரன் விவகாரத்தால் கடும் சீற்றத்தில் இருப்பவர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா. சுமந்திரனோடு ஒட்டி உறவாடிய தலைவர் மாவை சேனாதிராசா திடீரென்று அவருக்கு எதிராக கம்பு சுழற்றுவதில் ஓர் உண்மை பின்னால் மறைந்திருக்கிறது. அது மாவை சேனாதிராசாவை அரசியலில் இருந்து ஒதுக்கும் சுமந்திரனின் திட்டம். சாதுரியமாக சுமந்திரன் கையாண்ட திட்டத்தை கூட்டமைப்பினரும் யாழ்ப்பாணத்தில் வெளியாகும் வார இதழ் ஒன்றும் அம்பலப்படுத்தியிருந்தது.

இதன் பின்னர்தான் சுதாகரித்துக் கொண்ட மாவை. சேனாதிராஜா சுமந்திரனை அடக்கி வைக்க முடிவு செய்தார். ஆனால், அவருக்கு சுமந்திரனை வெளியேற்றும் திட்டம் அடியோடு இல்லை. தனது இடத்தைத் தக்க வைக்கும் எண்ணமே அவரது அந்த முடிவுக்குக் காரணம். இப்போது எழுந்துள்ள சூழலை சாதகமாகப் பயன்படுத்தி சுமந்திரனுக்கு எதிரானவர்கள் மாவை. சேனாதிராசாவை கொம்பு சீவி விட்டுள்ளார்கள். அதில் பிரதானமானவர் சரவணபவன் எம்.பி.

சுமந்திரனுக்கு எதிராகத் தீவிரமாக நிற்கும் இவர் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி அவர்களை தூண்டி விட்டவர். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாக சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு சிலவற்றை செய்ய முனைந்தார். அவரின் முயற்சி சுமந்திரனிடம் பலிக்கவில்லை.

இந்நிலையில் செல்வம் அடைக்கலநாதன் மற்றொரு பங்காளிக் கட்சித் தலைவரான சித்தார்த்தனையும் அழைத்துக் கொண்டு மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு சென்று பல மணி நேரம் பேசியிருந்தனர். கடந்த 13 ஆம திகதி நடந்த இந்தப் பேச்சில் சுமந்திரனை எப்படியாவது பேச்சாளர் பதவியில் இருந்து நீக்குவது என்பதுதான். ஆனால் பங்காளிக் கட்சிகளிடையே இதில் சிக்கல் நீடித்தது.

இந்தச் சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில் முன்னாள் எம்.பிக்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மாவை சேனாதிராசாவின் இல்லத்துக்குச் சென்றிருந்தனர். இவர்கள் யாரின் அழைப்பில் சென்றார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சாள்ஸ் நிர்மலநாதன் கூற, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாராம் சிறிதரன்.

நள்ளிரவுக்கு பின்னர் இவர்கள் இருவரும் வீடு திரும்பியிருந்தனர். இந்நிலையில் மறுநாள் காலையே சுமந்திரனுக்கு அழைப்பு எடுத்த சிறிதரன் நடந்த அனைத்தையும் அவரிடம் வரி விடாமல் கூறிவிட்டாராம்.

சுமந்திரனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் சிறிதரன் எம்.பியும் ஒருவர். தன்னை சின்னப் பிரபாகரன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அவர் சுமந்திரனின் நேர்காணல் சர்ச்சை குறித்து மூச்சுக்கூட காட்டவில்லை. இந்நிலையில், கருணாவாக நடந்து கொண்டு சுமந்திரனிடம் மண்டியிட்டு விட்டார். ஒருவேளை இப்போது அவர் தன்னை சின்னக் கருணா என்று எண்ணுகிறாரோ என்னவோ… யார் அறிவார்…?