சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள் / திருநெல்வேலி ஒப்பந்தம் : வழி தெரியாமல் தடுமாறும் தமிழ்க் கட்சிகள்!

திருநெல்வேலி ஒப்பந்தம் : வழி தெரியாமல் தடுமாறும் தமிழ்க் கட்சிகள்!

“சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப்பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒரு போதும் முன்வைக்கப்போவதில்லை” இந்த வார்த்தைகள் தலைவர் வே.பிரபாகரன் உதிர்த்தவை.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை இந்த வார்த்தைகள் மகாமந்திரம் என்றே கூறலாம். இந்த வார்த்தைகளின் உண்மையை – யதார்த்தத்தை தமிழ்மக்கள் உணர்ந்ததால் தான்இ ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளும்இ ஊடகங்களும் கொடுக்கும் அளவு முக்கியத்துவத்தை தமிழ்மக்கள் கொடுப்பதில்லை – ஆர்வமும் காட்டுவதில்லை.

2009 இற்குப்பின்னர்இ ஒட்டுமொத்தத் தமிழர்களின் சார்பில் முடிவெடுக்கும் அதிகாரம் விடுதலைப்புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பின் கரங்களில் வீழ்ந்தது. 2010 ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு குறித்து பலவிமர்சனங்கள் எழுந்தாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. காரணம் அந்தத் தேர்தலில் யாரையும் ஏற்கத்தயாராக இல்லை என்பதே.

ஆனால் 2015 ஜனாதிபதித் தேர்தல் அவ்வாறு அமையவில்லை. யார் வரக்கூடாது என்பதில் தமிழ்மக்கள் தௌpவாக இருந்தனர். இதனால்இ தமிழ் மக்களின் விருப்பமே கூட்டமைப்பின் முடிவானது. மக்களின் ஒட்டுமொத்த மனநிலையை அறிந்ததால் தான் கூட்டமைப்பு தேர்தலுக்கு ஒருசில நாள்கள் முன்பாகயாரை ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்தார்கள்.

தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு புதிய அரசமைப்பு மூலம் தீர்வு என்ற கோஷத்தை முன்னெடுத்தபோதும் அதுசாத்தியமாகவில்லை. ஆனால்இ அதற்குக் கூட்டமைப்பின் – தமிழ்மக்களின் தெரிவாக அமைந்த மைத்திரிபால சிறிசேனவின் கோமாளித்தனமான ஆட்சிமுறையே காரணமாகவும் அமைந்து போனது.

கடந்த தேர்தல் போன்றே இம்முறை தேர்தலிலும் யார்வரக்கூடாது என்பதில் தமிழ்மக்கள் தௌpவாகவே இருக்கிறார்கள். ஆனாலும்இ அரசியல் தலைமைகளின் குழப்பத்தால் தமிழ்மக்களின் தௌpந்த மனநிலையில் சிறு குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் தமிழ்மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இராணுவ ஆட்சியின் கீழ் செல்லத்தயாராக இல்லை. இந்நிலையில் தான் தமிழர் வரலாற்றில் முக்கியமானதாக மாறிய ‘திருநெல்வேலி ஒப்பந்தம்” கைச்சாத்தாகியது. தமிழ்த்தேசியக் கொள்கையால் ஒன்றுபட்டுஇ கருத்து வேறுபாடுகளால் தனித்துக்கிடக்கும் கட்சிகள் ஓரணியாகின.

திருநெல்வேலி ஒப்பந்தம் உருவாக்கத்துக்கான பேச்சுகளில் 6 கட்சிகள் பங்கேற்றன. இந்த ஒப்பந்தத்தின் 13 அம்சக்கோரிக்கைகளும் அனைவரின் ஒப்புதலோடே தயாரிக்கப்பட்டன. ஆனால் ஈற்றில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துவிட்டது. ஆனாலும் 13 அம்சக்கோரிக்கைகளை ஏற்றுள்ளது.

இந்தப் 13 அம்சக்கோரிக்கைகளே ஒட்டுமொத்தத் தமிழ்மக்களினதும் கோரிக்கைகளாகவும் அமைந்துள்ளது. எது எப்படி இருந்த போதிலும் திருநெல்வேலி ஒப்பந்தம் மூலம் ஓரணியான ஐந்துகட்சிகள் இன்று மீண்டும் இரண்டாகப் பிளவுபடும் சாத்தியம் உள்ளது.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சிஇ ரெலோஇ புளொட் கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் சஜித்பிரேமதாஸவுக்கு மறைமுக ஆதரவை வழங்குகிறது. ஆனால்இ க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்மக்கள் கூட்டணிஇ ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகள் 13 அம்சக்கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளருக்கே ஆதரவு அல்லது மாற்று ஏற்பாடு குறித்து சிந்திக்கின்றன. இந்நிலையில் கொழும்பில் நடைபெறவிருந்த ஐந்து கட்சிகளின் சந்திப்பில் இந்த இரு கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை.

இதனிடையே இன்று புதன்கிழமை ஐந்துகட்சிகளும் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி முடிவு ஒன்றை எடுக்கவுள்ளனர். ஆனால்இ இந்தக் கூட்டத்துக்கு முன்னராகவே நேற்றையதினம் தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிக்கைமூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

‘எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவு அளிப்பதில்லை” என்பதே அவரது – அவரின் கட்சியின் முடிவு. முதலமைச்சரின் வழியில் தொடரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முடிவும் இதுவாகவேஅமையும்.

இந்நிலையில் இன்று கூடும் ஐந்து கட்சிகளின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்படும். விவாதம் கடுமையாகுமானால் ஐந்து கட்சிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இந்தப்பிளவு ஏற்படாது தடுக்கவேண்டிய பெரும் பொறுப்பு திருநெல்வேலி ஒப்பந்தம் மூலம் வரலாற்றுச் சரித்திரத்தை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைகளில் தங்கியுள்ளது. எனினும் இந்தப்பெரும் பொறுப்பை மாணவர்கள் தலையில் சுமத்திவிட்டு ஐந்து கட்சிகளும்கூட நழுவிவிடமுடியாது.

இதேவேளைஇ க.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாடும் தமிழ்மக்கள் மத்தியில் – தமிழ் மக்களை கவர்ந்த கருத்துக்களே என்றபோதும் அந்தக்கருத்து ஆபத்து நிறைந்தது. எந்தவொரு சிங்கள ஆட்சியாளரும் தமிழர்களுக்கு தீர்வைத் தரப்போவதில்லை என்பது தமிழ்மக்களுக்கு உறுதியாகத் தெரிந்த நிலையில்இ யார்ஆட்சிக்குவரக்கூடாது என்பதில் தெளிவான நிலையில் உள்ளனர். க.வி.விக்னேஸ்வரனின் கருத்து தமிழ்மக்கள் விரும்பாத – ஒருபோதும் ஏற்கமுடியாத – மன்னிக்கமுடியாத ஒருவரை ஜனாதிபதியாக மாற்றிவிடும் அபாயநிலை உள்ளது. அதுமட்டுமல்லஇ பொதுவாக சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகளைத் திருப்திப்படுத்துவோரே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்கள். ஆனால்இ கோட்டாபய ஜனாதிபதியாக அமையும்பட்சத்தில் சிங்கள – பௌத்த பேரினவாதத்துடன் இராணுவ வல்லாதிக்கமும் சேர்ந்த ஆட்சியே அமையும்.

எனவே இப்போது தமிழ்மக்கள் முன்னுள்ள தெரிவு அவர்களுக்கானது – சிறுபான்மையினருக்கானது மட்டுமல்லஇ ஒட்டுமொத்த நாட்டுக்குமானதும் கூட. இதே அடிப்படையை வைத்துக்கொண்டே ஐந்து தமிழ்த் தேசியக்கட்சிகளும் தந்திரோபாய நகர்வுகளை மேற்கொண்டு தமிழ்மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும். இப்போது ஓரணியில் திரண்டுள்ள கட்சிகளும் முன்னெடுக்க வேண்டியது இதுவே.

  • தமிழ்க் குரலுக்காக செவ்வேள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சுமந்திரன் : நல்லவரா? கெட்டவரா?

தமிழர் அரசியல் மட்டுமல்ல இலங்கையின் அரசியலும்கூட இந்த அகால வேளையிலும் ஒருவரை நோக்கியே கூர்மைப்பட்டுள்ளது. அவர், ...