தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம் குடல் புற்றுநோய்க்கு அருமருந்து என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 3

பேரிச்சம் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அத்தகைய பேரிச்சம் பழத்தை மருத்துவ குணம் நிறைந்த தேனுடன் கலந்து சாப்பிட்டால், எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று தெரியுமா?

செய்முறை: ஒரு கண்ணாடி போத்தலில் விதையில்லாத பேரிச்சம் பழத்தைப் போட்டு, பேரிச்சம் பழம் மூழ்கும் அளவு தேன் ஊற்றி மூடி வைத்து, 3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முறை: தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை தினமும் காலை மற்றும் மாலையில் என ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலினுள் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.

நன்மை #1 பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும்.

நன்மை #2 பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இந்த பேரிச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

நன்மை #3 குடலியக்க பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும். முக்கியமாக இதனால் குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.

நன்மை #4 உடல் எடையைக் குறைக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

நன்மை #5 தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம், இதய செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இதில் உள்ள பீட்டா-டி-க்ளூக்கான், உடலின் கொலஸ்ட்ரால் உறிஞ்சும் அளவு குறைந்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையால் இதய நோய் வருவது தடுக்கப்படும்.