கழுத்தை சுற்றிலும் கருப்பாக உள்ளதா? இதோ எளிய வழிமுறைகள்

Neck Black Updatenews360
Neck Black Updatenews360

பொதுவாக சிலருக்கு முகம் என்ன தான் அழகாகவும், நிறமாகவும் இருந்தாலும் கூட கழுத்தில் உள்ள கருவளையங்கள் அவர்களது அழகையே சீர்குலைப்பதாக இருக்கும்.

கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகிவிடுகிறது.

இந்த கருமையை வேறும் சோப்பு கொண்டு போக்குவது கடினம். இதற்கு சில வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம். தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்ய சரியாகும்.

தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும். கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.