வவுனியாவில் பரீட்சை நிலையங்களை சுற்றி கடமையில் ஈடுபடும் காவல்துறையினர்

IMG20210310115345 01
IMG20210310115345 01

வவுனியாவில் க.பொ.த. சாதாரண பரீட்சை நடைபெற்ற நிலையங்களை சுற்றி காவல்துறையினர் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைகின்றது. பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 355 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

அந்தவகையில் பரீட்சை நிறைவடைந்ததும் பரீட்சை நிலையத்திலோ அல்லது வளாகத்திலோ கலகத்தில் ஈடுபடும் பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் ரத்து செய்யப்பட்டு,கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் இன்று பிற்பகல் பரீட்சை முடிவடைந்த நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து பரீட்சை நிலையங்களிலும் காவல்துறையினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன், பரீட்சை நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு பணித்திருந்தனர்.