இன்று சுபகாரியங்களில் வெற்றி கிடைக்கும் ராசிக்காரர் நீங்களா?

Rasi palan new 1 324x160 1
Rasi palan new 1 324x160 1
mesam

மேஷம் -மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் தடை தாமதங்கள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. சுய தொழிலில் வீண் பழி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மௌனம் சிறந்தது.

mithunam

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வம்பு வழக்குகளில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டு. சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.

kadakam

கடகம் -கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் ஒன்று நினைத்திருக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் அனைத்தும் நீங்கி நல்லவைகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நவீன உபகரணங்களை வாங்குவதற்கான யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிறைவு உண்டாகும்.

thulam

துலாம் -துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்கால திட்டங்கள் யாவும் பலிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த சில விஷயங்கள் நினைத்ததற்கு மாறாக நடக்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தன வரவு சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் உறவு சிக்கல் நீங்கும். சுய தொழிலில் லாபம் பெருகும்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் வேலையை கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் முன்னேற்றம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகள் நீங்கும்.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தலையெழுத்தையே மாற்றும் அளவிற்கு சில விஷயங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சோர்வு நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

meenam

மீனம் -மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எது எதற்கும் கவலை கொள்ளாதே நீங்கள் தேவையில்லாத மனக் குழப்பத்தினால் ஆழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை உணர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். சுயதொழில் பகைகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.