டொனால்ட் டிரம்ப் நேசிக்கும் மோப்ப நாய்

reuters trump military dog 1120
reuters trump military dog 1120

சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதியை கடந்த மாதம் அமெரிக்க படைகள் கண்டுபிடித்து சுற்றி வளைத்தன.

தப்பிக்க வேறு வழியில்லாத நிலையில் அல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்தார்.

அல் பாக்தாதியின் மறைவிடத்தை கண்டுபிடிப்பதில் அமெரிக்க ராணுவத்தின் மோப்பநாயான கோனன் முக்கிய பங்காற்றியது. அல் பாக்தாதியின் இருப்பிடத்தை மோப்பம் பிடித்து, அவரை விரட்டி சென்றது. ஆனால் பாக்தாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் நாய் காயமடைந்தது.

மோப்ப நாய் கோனனை வெகுவாக பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாக்தாதியை விரட்டியடித்து தற்கொலை செய்ய தூண்டிய தீரமான நாய் இதுதான் என கூறி அதன் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் குண்டு வெடிப்பு காயங்களில் இருந்து தேறிய மோப்ப நாய் கோனனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் விருது வழங்கி கவுரவித்தார்.

அதனை தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு கோனனை அறிமுகம் செய்துவைத்து பேசிய டிரம்ப், இந்த மோப்ப நாயை, தான் நேசிப்பதாக தெரிவித்தார். மேலும் கோனன் உலகின் ஆகச்சிறந்த நாய்களுள் ஒன்றாக திகழ்வதாகவும், இது தமக்கு பெருமையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.